November 13, 2016
தமிழ் நாயே..உன்னை கொல்லாம விடமாட்டேன்: கிராம சேவகருக்கு புத்த பிக்கு கொலை மிரட்டல்-
மட்டக்களப்பில் தமிழ் கிராம சேவகரை கொலை செய்வேன் என போலீஸ் முன்னிலையில் சிங்கள புத்த பிக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
மட்டக்களப்பு: சிங்கள இனவெறியுடன் புத்த பிக்கு ஒருவர் மட்டக்களப்பு தமிழ் கிராம சேகவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மட்டக்களப்பைச் சேர்ந்த அம்பிதியே சுமனா என்ற புத்த பிக்கு தமிழ் கிராம சேவகரை சிங்கள மொழியில் கேவலமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் புத்த பிக்கு கூறியுள்ளதாவது:
நீ ஒரு புலி... உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய ரத்தம் கொதிக்கு... நீ ஒரு நாய்... நீ ஒரு தமிழ் கிராம சேவகர்.. எங்கள் சிங்களருக்கு எதிராக வழக்கு போடுவதை நிறுத்து... ஒரு சிங்களவரையும் அவங்க இடத்தில் இருந்து போக சொல்லக் கூடாது...நான் உங்களை சும்மாவிடமாட்டேன்... இதுதான் என்னுடைய கடைசி எச்சரிக்கை...இவ்வாறு அந்த புத்தபிக்கு ஆவேசமாக பேசுகிறார்... ஆனால் அங்கு இருக்கும் போலீசார் புத்த பிக்குவை தடுக்கவில்லை. கொலை மிரட்டல் விடுத்த பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி பிக்குவை அழைத்து செல்கிறார்
தமிழ் நாயே..உன்னை கொல்லாம விடமாட்டேன்: கிராம சேவகருக்கு புத்த பிக்கு கொலை மிரட்டல்-
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.