November 5, 2016
இளம்பெண் உயிரிழப்பு குறித்த கோட்டாட்சியர் விசாரணைக்கு தாமதம்: உறவினர்கள் சாலைமறியல்
திருவண்ணாமலை அருகே இளம்பெண் உயிரிழப்பு குறித்த கோட்டாட்சியர் விசாரணைக்கு காலதாமதம் ஆனதை கண்டித்து, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குமாராசாமி பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி. இவர் விஷம் அருந்தியுள்ளதாக கூறி செங்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனிடையே, ஜோதிலட்சுமி உயிரிழப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் விசாரணைக்கு காலதாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை போலீசார் தடுக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இளம்பெண் உயிரிழப்பு குறித்த கோட்டாட்சியர் விசாரணைக்கு தாமதம்: உறவினர்கள் சாலைமறியல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.