Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி!



நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ரவுடி மனோகர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை அருகே உள்ள ஆத்தூரை சோந்தவரான மனோகர், கடந்த 2006 ஆம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடி மணல்மேடு சங்கரின் நண்பராக இருந்தவர். மனோகர் மீது கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக இருந்த மனோகர் இன்று அதிகாலை ஆத்தூரில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மணல்மேடு போலீசார், மனோகரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.