Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

இறைச்சி பிரியர்களே!… இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்குத் தான்….



புரதச்சத்து மனிதர்களின் உடல் திறனை அதிகரிக்க வெகுவாக உதவுகிறது. அது மட்டுமின்றி, ஹார்மோன், தசை, எலும்பு, தோல், இரத்தம், குருத்தெலும்பு என உடல் வலிமையை அதிகரிக்க உதவும் அனைத்திற்கும் புரதச்சத்தின் பங்கு முக்கிய தேவையாக விளங்குகிறது.
பால் உணவுகளான, சீஸ், தயிர், பால் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் புரதச்சத்து கிடைக்கிறது. அதுபோன்று, அசைவ உணவுகளான இறைச்சி மற்றும் மீன் வகைகளிலும் புரதச்சத்து கிடைக்கிறது.
ஆனால், புரதச்சத்து கிடைக்க வேண்டுமென்பதற்காக இறைச்சி உண்ணும் பெண்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் 2016 மாநாட்டில் வெளியான ஆய்வு கட்டுரையில், புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ளும் முதிர் வயது பெண்களையும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவை உட்கொள்ளும் முதிர்வயது பெண்களையும் பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் இறைச்சி உணவை உட்கொண்ட பெண்கள் பலர் இதயக் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே காய்கறிகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்து ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.