Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

கைவிரலில் கருப்பு 'மை' வைக்கப்படுவதை நிறுத்த வேண்டும்: வைரமுத்து வலியுறுத்தல்



ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது கைவிரலில் கருப்பு "மை"  வைக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, கறுப்பை வெள்ளையாகும் தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். விரலிலும், தலையிலும் மை அடிப்பதை நிறுத்துங்கள் என்றும் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு திரைப்பட கலைஞர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், உள்ளிட்டோர் மோடியின் அறிவிப்பை வரவேற்ற நிலையில், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் நேற்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.