November 15, 2016
ஏ.டி.எம்மில் மேல் சட்டையை கழற்றிய திருநங்கையால் பரபரப்பு! காரணம் இதுதான்..!!
டெல்லியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தப்போது, திடீரென ஒரு திருநங்கை தான் அணிந்து இருந்த மேல்சட்டையை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மயூர் விகார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க வரிசையில் ஆண்களும், பெண்களும் நின்று கொண்டிருந்தப்போது, அந்த வரிசையில் நின்று கொண்டு இருந்த ஒரு திருநங்கை திடீரென, அவர் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் பெண் காவலர்களை அழைத்தனர்.
உடனடியாக அங்கு வந்து பெண் காவலர்கள் அந்த திருநங்கையை அருகில் இருக்கும் காசிபூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து பேசிய அந்த திருநங்கை ”ஆண்கள் மற்றும் பெண்கள் தன்னை வரிசையில் நிற்கக் கூடாது என்று திட்டியதால் அவ்வாறு செய்தேன்” என்று அந்த திருநங்கை விளக்கம் அளித்தார். இதனையடுத்து, பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அருகில் இருந்த ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் அந்த திருநங்கை பணம் எடுத்து சென்றார் .
ஏ.டி.எம்மில் மேல் சட்டையை கழற்றிய திருநங்கையால் பரபரப்பு! காரணம் இதுதான்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.