November 7, 2016
நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் - திருமாவளவன்
தீண்டாமை வன்கொடுமை திருத்தச் சட்டம் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கண்காணிப்பகம் சார்பில், தீண்டாமை வன்கொடுமை திருத்தச் சட்டம் குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும், தொகுதிக்கு அந்நியமான அனைவரையும் வெளியேற்றி நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தீண்டாமை வன்கொடுமை திருத்தச் சட்டம் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தனி பயிற்சி பட்டறைகளை நடத்திட வேண்டும் எனவும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்
நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் - திருமாவளவன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.