November 16, 2016
திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருக்கிட்டே இருக்குது ..... விஜய் மல்லையாவின் கடன் ரத்து - ஆக ஓகோ ...
விவசாயி, மாணவர்கள் வாங்கிய கடனுக்கு ஜப்தி செய்யும் எஸ்.பி.ஐ மல்லையாவின் கடனை ரத்து செய்தது
விஜய் மல்லையாவின் 1,201 கோடி ரூபாய் கடன் உள்பட 63 பேரின் கடன்களை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் 17 வங்கிகளில் சுமார் 7000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. அதில் தங்களிடம் மல்லையா வாங்கிய 1201 கோடி ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி நிறுவனம் முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது. மொத்தம் 63 பேரின் ரூ.7,016 கோடி ரூபாய் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடன் வாங்கி கொண்டு திருப்பி செலுத்தாத இந்த 63 பேர் பட்டியலில் கிங் பிஷர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இது தவிர 31 பேரின் கடன்கள் பகுதியாக தள்ளுபடி செய்யப்பட்டு, 6 பேரின் கடன்கள் மட்டும் வாராக் கடனாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. விவசாயி மற்றும் மாணவர்கள் வாங்கிய கடன்களுக்காக ஜப்தி உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும் எஸ்.பி.ஐ, தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையாவின் கடன்களை ரத்து செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த பணத்தை எடுக்கமுடியாமல் கடந்த ஒரு வார காலமாக மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வரும் நிலையில் பொது துறை வங்கியான எஸ்.பி.ஐ பெரும் தொகையை தள்ளுபடி செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிறுவனங்கள்
1. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்: ரூ.1,201 கோடி
2. கேஎஸ் ஆயில்: ரூ.596 கோடி
3.சூர்யா பார்மசிடிகல்: ரூ.526 கோடி
4. ஜிஇடி இன்ஜீனியரிங் கன்ஸ்டிரக்சன்ஸ்: ரூ.400 கோடி
5. சாய் இன்போ சிஸ்டம்: ரூ.376 கோடி
6. விஎம்சி சிஸ்டம்ஸ்: ரூ.370 கோடி
7. அக்னிட் கல்வி நிறுவனம்: ரூ.315 கோடி
8. ஸ்ரீகணேஷ் ஜிவ்லரி: ரூ.313 கோடி
9. அபெக்ஸ் என்கோன் நிறுவனம்: ரூ.266 கோடி
10. யூரோ செராமிக்ஸ்: ரூ.266 கோடி.
திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருக்கிட்டே இருக்குது ..... விஜய் மல்லையாவின் கடன் ரத்து - ஆக ஓகோ ...
Reviewed by மறத்தமிழன்
on
November 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.