Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க கட்டணம் வசூல்?



சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் சிலரின் கணக்கிலிருந்து கட்டணமாக பணம் எடுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் இன்று நண்பகலில் சென்றதாக கூறப்படுகிறது. 

ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து தனது கணக்கிலிருந்து 2000 ரூபாய் எடுத்துள்ளார், பின்னர் அதற்கான ரசீது ஏ.டி.எம் கருவியில் இருந்து வந்துள்ளது. அதில் பணம் எடுத்தற்கு கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவடியில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்திலும் நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் வைரலாக பரவிவருகிறது.

ஏற்கெனவே 500 மற்றும் 1000 ரூபாய் நோடுகள் செல்லாத நிலையில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது அதற்கு கட்டணமாக பணம் பிடிக்கப்படுவது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் இந்த சம்பவம் குறித்து எந்த வங்கியும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும்போது அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.