November 13, 2016
மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையை கொள்ளையடித்த பொதுமக்கள் சில்லரை பணம் இல்லாததால் ஆத்திரம்
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால், மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் மேற்படி நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு அலைந்து வருகின்றனர். ஆனால் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் பல இடங்களில் இந்த பணத்தை மாற்ற முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க சில்லரை இல்லாததால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூருக்கு அருகே உள்ள பர்தகா கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலரும் இவ்வாறு பாதிக்கப்பட்டு இருந்தனர். சில்லரை நோட்டுகள் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர் போலீசில் புகார் செய்தார்.
எனினும் இந்த சம்பவத்தை மறுத்துள்ள போலீசார், அந்த கடையில் கடந்த 4 மாதங்களாக பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடை ஊழியர்களிடம் லேசான தகராறில் மட்டுமே ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்
மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையை கொள்ளையடித்த பொதுமக்கள் சில்லரை பணம் இல்லாததால் ஆத்திரம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.