Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

“குஷ்பு குறித்து அவதூறாக பேசினாரா நக்மா?” - தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம்



மகிளா காங்கிரஸ் தேசிய தலைவரான நக்மா, தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பூவை பற்றி மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாக வெளியான செய்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மறுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஷ்புவுக்கு எதிராக நக்மா எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். என்.டி.டி.வி தொலைகாட்சி ஒளிபரப்புக்கு மத்திய அரசு ஒருநாள் தடை விதித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என குறிப்பிட்ட அவர், இன்று இந்த தொலைகாட்சிக்கு விதிக்கப்பட்ட தடை, நாளை வேறு சில தொலைகாட்சிகளுக்கும் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்ட திருநாவுக்கரசர், குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால் நெல் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.