Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

திருநெல்வேலி அருகே பெண் மீது ஆசிட் வீச்சு: ஆட்டோ ஓட்டுனருக்கு வலைவீச்சு



திருநெல்வேலி அருகே பெண்ணின் மீது ஆசிட் வீசிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ராமலட்சுமி, அங்குள்ள தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு முன்பு சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

ராமலட்சுமிக்கு இதுவரை குழந்தை பிறக்காத நிலையில், மீண்டும் சின்னராசுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சின்னராசு கூறியதால் களக்காடு அருகே சென்ற ராமலட்சுமி மீது சின்னராசு ஆசிட் வீசி உள்ளார்.

தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டதால், ராமலட்சுமி அலறித் துடித்தார். அவரது அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே ராமலட்சுமியை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடலில் 60 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து ராமலட்சுமியிடம் நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன், வாக்குமூலம் பெற்றார். தப்பிஓடிய ஆட்டோ ஓட்டுநர் சின்னராஜுவை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.