Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 6, 2016

குஷ்புக்கு பேச அருகதை இல்லை – நக்மா பகிரங்க தாக்குதல்!



பொது சிவில் சட்டம் பற்றியும் முஸ்லீம் பெண்களின் விவாகரத்து பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த குஷ்புவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் குஷ்பூவை நக்மா வெளுத்து வாங்கினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, பொதுசிவில் சட்டம் பற்றி கருத்து சொல்ல குஷ்புவிற்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமாக பிறந்த அவர், சினிமாவில் பொட்டு வைத்து நடித்தார். ஓ.கே. நிஜவாழ்க்கையிலும் அதனையே செய்கிறார். ஏன் என்று கேட்டால் இந்து ஒருவரை திருமணம் செய்ததாக கூறுகிறார். அப்போது ஒரு மதத்தை பின்பற்றிக் கொண்டு ஏன் முஸ்லீம் ஷரியத் சட்டம் பற்றி பேச வேண்டும்.
அவருக்கு மாவட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் மாலையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன். இவ்வாறு நக்மா பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.