துருக்கி நாட்டில் 18 வயதுக்கு குறைவான பெண்களை கற்பழித்துவிட்டு அதன்பின்னர் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டால் தண்டனை கிடையாது என்ற சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றியதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த சட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக துருக்கி அரசு இன்று அறிவித்துள்ளது. 18 வயதுள்ள சிறுமிக்கு இந்த புதிய சட்டம் பொருந்தும் என்பதால், இதன் மூலம் குழந்தை திருமணத்தை அரசாங்கமே ஆதாரிப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்றும் கற்பழித்தால் திருமணம் செய்து கொள்ளலாம், தண்டனை கிடைக்காது என்று பல ஆண்களுக்கு எண்ணம் ஏற்பட்டுவிடும் என்றும் எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் எடுத்து கூறியதை அடுத்து இந்த சட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.