Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 18, 2016

மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திருமாவளவன் அறிவுறுத்தல்!



மக்கள் படுகின்ற துயரத்திற்கு, பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை அசோக் நகரில் உள்ள வங்கியில் தன்னிடம் இருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி,  4500 ரூபாயை பெறுவதற்காக திருமாவளவன் வங்கிக்கு வந்திருந்தார்.

பொதுமக்களுடன் வரிசையில் நின்று ரூபாய் நோட்டுக்களை அவர் மாற்றினார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள்  உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  வாங்க சில்லரை இல்லாமல் சிரமப்படுவதாகக் கூறினார். 

ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் சிரமத்தை தான் நேரில் உணர்ந்துகொண்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். 

மக்கள் படும் சிரமங்களுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.