Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

மருமகளின் பிரசவச் செலவுகளுக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றவர் பலியான சோகம்



கடந்த 13 நாட்களாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் டியோரியா நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு நேற்று பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 60 வயது முதியவர் பலியானார்.

வங்கிக் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான முதியவரின் மருமகளுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவம் ஆனது. அவரது தொடர் சிகிச்சைக்காக வங்கிக்கு அவசரமாக பணம் எடுக்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.