Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

கணவனை கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பிய மனைவியின் உரையாடல்..!!



மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.

மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் “வெட்டிக்கோ”, “வெட்டிக்காதே” அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.

நல்லபடியாக பார்த்துக்குங்க.. உங்கள் கூந்தலை மட்டுமல்ல. உங்கள் கணவனையும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.