Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

இலவச ஆடு வழங்குவதில் ஊழல் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக கூறி சாலைமறியல்



பண்ருட்டி அருகே இலவச ஆடு வழங்குவதில் ஊழல் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக கூறி
மறியலில் ஈடுபட்டோரை, அகற்ற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குச்செட்டிப்பாளையம் பகுதியில், தமிழக அரசின்
விலையில்லா ஆடுகள் வழங்குவதற்காக அப்பகுதி மக்களிடம் முன்னாள் அதிமுக
ஊராட்சிமன்ற தலைவர் ரோஸ்மானி சுப்பிரமணி தலா ஒருநபருக்கு 2,000 ரூபாய் என 300
பேரிடம் பண வசூல் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து அவர்கள் பண்ருட்டி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல் துறையினர் மற்றும் கால்நடைத்துறை
அதிகாரி மோகன் சம்பவ இடத்திற்கு வந்து நீண்டநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சமாதானம் ஆகாததால் போலீசார் வலுக்கட்டாயமாக பொதுமக்களை சாலையில்
இருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.