Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகையை விற்க முயன்றவர் கைது



கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் நகை கடையில் போலி நகை விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் பிரபல நகைகடையில் 5 சவரன் நகையை விற்பனை செய்ய, தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த கருப்பன் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது நகை கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் கொண்டு வந்த நகையை சோதனை செய்தபோது, செம்பு உலோக நகையில் 30 சதவீதம் தங்கம் முலாம் பூசப்பட்டு விற்பனை செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்நபரை மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ராமநாதபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் போலி நகைகளை செய்து கொடுப்பதும், தமிழகம் முழுவதும் உள்ள நகை கடைகளில் போலி நகைகள் விற்பனை செய்ய ஒரு கும்பல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மோசடி கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.