November 9, 2016
திருச்சி - பெரம்பலூர் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ‘சைக்கோ’ கொள்ளையன் கைது
திருச்சி மாவட்ட கிராமங்களில் கொள்ளை அடித்து வந்த விஜயகுமார் என்பவரை, அப்பகுதி இளைஞர்கள் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி - பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லையை ஒட்டி உள்ள எதுமலை, வரதராஜபுரம், சிறுகனூர், தேனூர், பெரம்பிகுளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மூன்று மாத காலமாக கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்களே, டார்ச் லைட் மற்றும் தீப்பந்தங்களுடன் இரவு நேரங்களில் காவல் காத்து வந்தனர்.
இந்நிலையில், இளைஞர்கள் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, விஜயகுமார் என்பவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அவரை பிடித்து இளைஞர்கள், காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பல கொள்ளையர்கள் சுற்றித்திரிவதால் அவர்களைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி - பெரம்பலூர் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ‘சைக்கோ’ கொள்ளையன் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.