Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

வெற்றி மகுடம் சூட்டிய அன்புதோழி..! என்ன வேண்டும் சசி..! நீங்களே போதும் அக்கா..! ஆனந்தக் கண்ணீரில்



படுத்துக் கொண்டே ஜெயித்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர். அமெரிக்காவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது.
அந்த தேர்தலில் மக்கள் திலகம் பிரச்சாரத்திற்கு வரவில்லை. ஆனால் அதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்தார்.
தமிழகத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் புகுந்து புறப்பட்டு எம்ஜிஆரை மகத்தான வெற்றி பெறச் செய்தார்.
இதோ இப்போது சரித்திரம் திரும்பியது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்க.. இடைதேர்தல் மூன்று தொகுதிகளில் நடை பெற்றது.
முதல்வரின் அன்புதோழி சசிகலா நடராஜன்.. அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் பம்பரம்போல் சுழல விட்டார். தொண்டர்களை உற்சாகப்படுத்தி முடுக்கி விட்டார்.
சசியின் உழைப்பிற்கும் மதி யூகத்திற்கும் வெற்றி கிடைத்தது. முக்கனிகள் போல மூன்று  தொகுதிகளில் வெற்றி மகுடம் சூட்டி முதல்வரின் பாதங்களில் சமர்ப்பித்தார்.
இந்த வெற்றிச் செய்தியைக் கேட்ட முதல்வர் சசியின் கரங்களைப்  பிடித்துக்கொண்டு ஆனந்தத்தில் சசி உனக்கு என்ன வேணும் என்று கேட்டாராம்.
அதற்கு சசிகாலா நீங்கள் மட்டுமே போதும் அக்கா என்று கூறியதாக மருத்துவமனையில் இருந்து செய்திகள் வந்தது என்கிறார்கள்.
எப்படியோ முதல்வர் மீண்டும் உற்சாகமாக வெளி வர இந்த மூன்று வெற்றிகள் காரணம் என்பதில் மகிழ்ந்து கிடக்கிறது தமிழகம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.