Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

மேடையிலேயே கதறி கதறி அழுத இலங்கை வீரர் ஜெயவர்த்தனே!!



இலங்கையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோய் தொடர்பான சிறப்பு மருத்துவமனை அமைக்கவும் இலங்கை வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் டிரையல் வாக் என்ற பெயரில் இங்கையில் 663 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.
இதில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருபவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே. இவர் அவ்வப்போது இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், புற்று நோய் மருத்துவமனை அமைப்பதற்கான அறக்கட்டளை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயவர்த்தனே மேடையில் ஏறி புற்று நோய் தொடர்பாக பேசியபோது கண் கலங்கிய காட்சி அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இன்றைய நாள் மிகச்சிறந்த நாள் என்றும் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் என தெரிவித்து உள்ளார். ஜெயவர்த்தனேவின் சகோதரர் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.