Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 22, 2016

ஆபாசப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த மர்மநபர்… அதிரடி முடிவெடுத்த இளம்பெண்….



என்னுடன் உடலுறவு வைத்து கொள்ளாவிட்டால், உன் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த மர்மநபரை எதிர்த்து இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எடுத்த அதிரடி முடிவு பலரால் வரவேற்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மும்பை சேர்ந்த தருணா அஸ்வினிற்கு ஒரு மர்ம நபரிடமிருந்து இரண்டு இ-மெயில்கள் வந்துள்ளன. அதில், உன் இணைய கணக்கில் ஊடுருவி நீ உன் காதலனுக்கு அனுப்பிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நான் ஹேக் செய்துள்ளேன்.
இந்த படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னுடன் உடல் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்றும், உனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன், அதற்குள் உன் பதிலை தெரிவிக்க வேண்டும் என கூறி, வீடியோவையும், புகைப்படங்களையும் தருணாவிற்கு அனுப்பியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தருணா நடந்த சம்பவத்தை விளக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க உதவிமாறும், தன்னை போல் மற்ற பெண்களும் இதுபோன்ற மிரட்டல்களை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என தருணா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தருணாவின் இந்த துணிச்சலான முடிவை பல இணையவாசிகள் வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து மும்பை காவல் துறையினர் அவரை தொடர்பு கொண்ட இது குறித்து ஒரு புகார் அளிக்குமாறு கேட்டுகொண்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.