Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் திமுக, அதிமுக - பிரேமலதா



இந்தியாவிலேயே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சராத்தை வளர்த்து விட்டவர்கள் திமுக, அதிமுக தான் என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் ஈசநத்தம் பகுதியில் திறந்தவேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்து விட்டவர்கள் திமுக, அதிமுக தான் என குற்றச்சாட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தேமுதிக உருவாக்கப்பட்டதாகவும் , ஆனால் விஜயகாந்திற்கு மக்கள் ஆதரவு அளிக்காதது  மனவருத்ததை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார், கடந்த 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது விஜயகாந்த் செய்த மிகப்பெரிய தவறு என்று வேதனை தெரிவித்த பிரேமலதா, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தமிழகத்தை தலைகுனிய செய்யக்கூடியது என்பதை மக்கள் புரிந்து கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் எனவும் அவர் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.