Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

சென்னையில் காவல்நிலையம் அருகே திருநங்கை மர்ம முறையில் மரணம்!



சென்னையில் காவல்நிலையம் அருகே மர்ம மரணம் அடைந்த திருநங்கையின் உடலை வாங்க மறுத்து திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த திருநங்கை தாரா பாண்டிபஜார் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருநங்கை தாரா மர்மமான முறையில் அந்த பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருநங்களை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநங்கை தாராவின் உடலை வாங்கி மறுத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கலைத்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்நிலையத்தின் அருகே இருக்கும் சிசிடிவி கேமராக்களை கொண்டு விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.