November 15, 2016
வாயில் மதுவை ஊற்றி…செய் அல்லது செத்துமடி..!! திரு நங்கைகள் பரிதாபம்…!! அன்று…??
திரு நங்கைகள் இன்று பல அரசு துறைகளில் பெரிய பதவிகளுக்கு வந்து விட்டனர். போலீஸ் அதிகாரி ஆகிவிட்டனர்.
தொலைக் காட்சிகளில்நல்ல நிகழ்சிகளை தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். பெரிய படிப்பு படிக்கின்றனர்.
அரசாங்கமும் அவர்களுக்கு பார்த்து பார்த்துநல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது..!
இது ஒரு புறம் இருந்தாலும் அவர்களின் இன்னொரு புறம் மிக கொடுமையாக இருக்கிறது என்பது தான் சோகம்..!
பாலியல் ரீதியாக அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மிக கொடூரமானவை..! கேவலம் திரு நங்கை தானே என்று நினைத்து விடுகின்றனர் சில மனித மிருகங்கள்..!
கடந்த வாரம் வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ வந்தது. இதயம் இருக்கும் யாராலும் அதை பார்க்கவே முடியாது. ஒரு திருநங்கை இரண்டு முரட்டு ரவுடிகளிடம் மாட்டி சிறை வைக்கப் படுகிறார்.
ஒருவன் வீடியோ எடுக்கிறான். அந்த அப்பாவி திருங்கை வாயில் மதுவை ஊற்றுகிறான். அவர் கன்னத்தில் மிருகத்தனமாக அடித்து கதற வைக்கிறான்.
ஹிந்தியில் செய் செய் என்று கூறி அடித்து அந்த அருவெறுப்பான காரியத்தைச் செய்யச்சொல்லி மீண்டும் அடிக்க அந்த திரு நங்கை..!
கடவுளே இதற்கு மேல் எழுத முடியாது..! அவ்வளவு ஈனத்தனமான காரியத்தை செய்கிறார். வாந்தி எடுக்கிறார். கையெடுத்து கும்பிடுகிறார்..கதறுகிறார்.
அவரை இன்னொரு ரவுடி பிடித்துக் கொண்டு நெஞ்சில் ஏறி மிதிக்கிறான். தனக்கும் செய் என்கிறான்..!அந்த அப்பாவி திருநங்கை மயங்கி சரிகிறார்.
அந்த இரண்டு நாய்களும் சிரித்து மகிழ்கிறார்கள்..! உயிரை உருக்கும் அந்த வீடியோ அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இணையத்தில் அந்த வீடியோ இன்னும் இருக்கிறது.
அதைப் போன்று மேலும் பல கொடுமையான வீடியோக்கள் வலம் வருகிறது..! நாம் எங்கிருக்கிறோம்..!
சமீபத்தில் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தின் முன்பு ஒரு அப்பாவி திருநங்கை தீக்குளித்து இறந்தார்.
அவமானம் தாங்க இயலாமல் இறந்தேன் என்று கூறி இருக்கிறார்.அது எந்த மாதிரி அவமானம்..? காவல் துறை நமது நண்பன் அல்லவா..!
அவர்கள் எப்படி அவமானப் படுத்துவார்கள்..? நம்மை காக்கும் பொறுப்பில் உள்ளவர்களால் நமக்கு மரணம் வரலாமா..?
அந்த திருநங்கையின் தற்கொலைக்கு உண்மயான காரணம் தான் என்ன..?
ராம் குமாரை மறந்தது போல இந்த மரணமும் நமக்கு மறந்து போகும்…?!
வாயில் மதுவை ஊற்றி…செய் அல்லது செத்துமடி..!! திரு நங்கைகள் பரிதாபம்…!! அன்று…??
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.