காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், புதிய அறிவிப்பைக் கையாள நமது நாட்டின் வங்கித்துறை தயாராக உள்ளதா என்றும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்துவது சரியானதா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு
பிரதமர் மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என்பதை அறிவித்துள்ளதை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.