Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 9, 2016

பத்மநாபசாமி கோவில் பாதுகாப்பு அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை


திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதுகாப்பு அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலின் ரகசிய நிலவறைகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர புதையல்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்த கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லறை பகுதியை சேர்ந்த ஷியாம்குமார் (வயது 54). என்பவர் இந்த கோவிலின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று பகல் தனது வீட்டில் அவர் தூக்குபோட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி அவரது மனைவி பிந்து போலீசில் புகார் செய்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.