Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

சிறிலங்காவின் போர்க்குற்றம்! சர்வதேச ரீதியாக மீண்டும் அழுத்தம்



சிறிலங்காவுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

உண்மைகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குதல்  நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய நான்கு விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கு அமைவாக நடவடிக்கைகள்  காலதாமதம் இன்றி சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச பங்களிப்புகள் இன்றியமையாததாகும். எனவே உண்மைகளை கண்டறிவதற்கான பொறிமுறையில் சர்வதேச கலப்பு நீதிமன்றம் அத்தியாவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும்  இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச கலப்பு நீதி மன்றம் அநாவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.