November 16, 2016
பூந்தமல்லி அருகே ஏரியில் பெண் பிணமாக மீட்பு கொலையா?...
பூந்தமல்லியை அடுத்த போரூர் பகுதியில் உள்ள ஏரியில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஏரியில் மிதந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது. அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து உடலை ஏரியில் வீசினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே ஏரியில் பெண் பிணமாக மீட்பு கொலையா?...
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.