Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

பள்ளிக் குழந்தையை காரில் கடத்தி நகைகளை பறித்த மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு



சிவகங்கையில் 8 வயது பள்ளிக் குழந்தையை காரில் கடத்தி நகைகளை பறித்த மர்ம நபர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் திவ்யா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்துவருகிறார். மதிய உணவு இடைவேளையில் வீட்டில் உணவருந்திவிட்டு பள்ளி திரும்பும் வழியில் திவ்யாவை, காரில் முகமூடி அணிந்துவந்த மர்ம கும்பல் கடத்தியது.
இதையடுத்து நகைகளை பறித்துக்கொண்ட அந்த கும்பல், சாலையில் போலீசார் நிற்பதைக் கண்டு குழந்தையை இறக்கிவிட்ட பின் தப்பிச் சென்றது. சாலையில் அழுதபடி நின்ற குழந்தையை மீட்ட போலீசார் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சிவகங்கை நகர போலீசார் குழந்தை கடத்தப்பட்ட பகுதியில் இருக்கும் கடைகளின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.