November 30, 2016
புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்த தமிழ் சிறுவன்!
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியா வம்சாவழியை சேர்ந்த 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.
மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும், இப்போதிருக்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புற்றுநோயாகவும் காணப்படுகின்றது. கதிர்வீச்சு, chemotherapy ஆகியவற்றால் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்தமுடியும்.
இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் தாக்கிய பெண்களில் உற்பத்தியாகும் ஐடி4 (ID4) எனும் புரதத்தைக் கண்டுபிடிப்பதற்கான புதிய வழிமுறையைக் கண்டுபிடித்ததன் மூலம் மருந்துகளால் சிகிச்சையளிக்கக்கூடிய நிலைக்கு நோயாளியை மாற்ற முடியும் என கிருதின் தெரிவித்துள்ளார்.
இக்கண்டுபிடிப்புக்காக, பிரிட்டனில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானிகளுக்கான The Big Bang Fair என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களில் கிருதினின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒருவருக்கு Alzheimer எனப்படும் நினைவிழப்பு நோய் ஏற்படுவதற்கான முதலாவது அறிகுறி தென்படுவதற்கு 10 வருடங்களுக்கு முன்பாகவே அதைக் கண்டறியும் சோதனை முறையைக் கண்டு பிடித்ததற்காக, கடந்த ஆண்டு Google Science Fair விருது கிருதினுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்த தமிழ் சிறுவன்!
Reviewed by மறத்தமிழன்
on
November 30, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.