November 9, 2016
பிச்சைக்காரன் படத்தில் வரும் காட்சிக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் சம்மந்தம் உண்டா - நன்றாக பாருங்கள் விடியோவை
பிச்சைக்காரன் படத்தில் வரும் அந்த காட்சிக்கும் தற்போது மோடி அரசு நடைமுறை படுத்தி இருக்கும் முட்டாள் தனமான முடிவிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் கருத்து போராளிகள்
1.அந்த காட்சியில் அந்த வசனம் இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போகவேண்டும் என்றால் 500 1000 ருபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் கூறி இருப்பார் மாறாக இங்கே என்ன நடந்து இருக்கிறது மோடி என்ன செய்து இருக்கிறார் ஒழிக்க வில்லை மாறாக 500 2000 நோட்டுகளை புழக்கத்தில் விட போகிறார்கள்
2. 100 , 50 , 20 ,10, இந்த நோட்டுகள் மட்டும் இருந்தால் யாரும் அதிகமாக பணத்தை பதுக்க முடியாது என்பது அந்த காட்சியின் கருத்து அது நடந்து இருக்கிறதா ? இல்லை 500 2000 ருபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் வர போகிறது
3.இதில் கண்டிப்பாக பாதிக்க படப்போவது என்னமோ சாமானியன் மற்றும் நடுத்தர வர்க்கங்கள் தான் 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்து வைத்து இருப்பவன் வீடு கட்ட சேமித்து வைத்து இருப்பவர்கள் தன்னுடைய பிள்ளைகள் கல்யாணத்திற்கு சேர்த்து வைத்து இருப்பவர்கள் தான் அதிகமாக பாதிக்க பட போவது
4.முகநூலில் தான் சிலர் புரிதல் இல்லாமல் அந்த காட்சியை பதிவு செய்கிறார்கள் என்றால் பெரிய பெரிய ஊடங்கங்கள் கூட கொஞ்சம் கூட யோசிக்காமல் பொறுப்பு இல்லாமல் அதை பதிவு செய்து மோடி மேல் இருக்கும் வெறுப்பை மக்களிடையே இலகுவாக்கும் வேலையை செய்து வருகிறார்கள் என்பது தான் மிகவும் வறுத்த பட வேண்டிய விடயமாக இருக்கிறது
5. அளவிற்கு மேல் பணம் வைத்து இருப்பவன் எல்லோரும் 1000 கோடி 2000 கோடி என்று பணத்தை வீட்டில் வைத்து இருக்க மாட்டான் தங்கமாகவும் கட்டிடமாகவும் இடங்களாகவும் டாலராகவும் முதலீடாகவும் பினாமிகளாவும் வைத்து இருப்பார்கள் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை . இருப்பவனுக்கு இழப்பு பெரிய விடயமும் இல்லை
6.அதிகமாக கருப்பு பணம் வைத்து இருப்பவர்களுக்கு அதை வெள்ளையாக மாற்ற ஒரு வாய்ப்பு ஆனால் சாமானியனுக்கு நடுத்தறவர்கத்திற்கும் தான் ஆப்பு
7. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி ஒரு சர்வாதிகார ஆட்சியாக மோடி அரசு செயல்படுகிறது . மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வளவு பாதிக்க பட்டு இருக்கிறது மக்கள் ஒரு முட்டாளை பிரதமராக தேர்ந்து எடுத்து விட்டோம் என்று உணர்ந்த நாள் இன்று.
பிச்சைக்காரன் படத்தில் வரும் காட்சிக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் சம்மந்தம் உண்டா - நன்றாக பாருங்கள் விடியோவை
Reviewed by மறத்தமிழன்
on
November 09, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.