November 20, 2016
தடையை மீறி வரும் ஆண்டு ஜல்லிகட்டு போட்டியை நடத்துவோம் என சீமான் பேட்டி!
ஜல்லிக்கட்டு தடை நீடித்தால் தடையை மீறி வரும் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தடை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ், திமுக கட்சிகளுக்கு உரிமை இல்லை என்றார்.
அவசரச்சட்டம் நிறைவேற்றி, வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அரசு அனுமதி பெற வேண்டும் என தெரிவித்தார். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவோம் என்றார்.
500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தது கருப்பு பணத்தையோ ஊழல் பணத்தையோ ஒழிக்காது. இது சாதாராண மக்களை பாதிக்ககூடிய செயலாகும் என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.
தடையை மீறி வரும் ஆண்டு ஜல்லிகட்டு போட்டியை நடத்துவோம் என சீமான் பேட்டி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.