Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

வங்கி கணக்கில் ஆதார், செல்போன் எண்களை இணைக்க தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்



பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை  இணைக்க  தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்கள்  நடைபெறகின்றன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பின்னர் மக்கள் செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் காகிதமில்லாத பண பரிமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மின்னணு பண பரிமாற்றத்திற்கு தயாராகுங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு இன்று  முதல் டிசம்பர் 2ம் தேதி வரை ஆதார் எண் இணைப்பு மற்றும் ரூபே கார்டு வினியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்துகிறது.இந்த முகாமில் வாடிக்கையாளர், பொதுமக்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், ஜன்தன் கணக்குகளில் வினியோகிக்கப்படாமல் உள்ள ரூபே கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை துவங்க விண்ணப்பங்களை சிறப்பு முகாமில் அளிக்கலாம். எனவே, ஒவ்வொரு வங்கி கிளையிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி ஆதார் எண் இணைப்பு மற்றும் செல்போன் எண் இணைப்பு, ரூபே கார்டுகள் வினியோகம் மற்றும் ஜன்தன் சேமிப்பு கணக்கு தொடங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஆதார் எண் பெற்ற அனைவரும், தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். வங்கி கணக்கு பெற்ற அனைவருக்கும் 'ரூபே டெபிட் கார்டு' வழங்கப் படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.