தற்போது நிறைய பேர் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவதற்கு, குறைவான அளவில் நீர் குடிப்பது, உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை அல்லது உட்கொள்ளும் சில மருந்துகள் தான் காரணம். ஆனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் மலச்சிக்கலை உண்டாக்கும் என தெரியுமா? இங்கு அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.உறைய வைக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்துக்கள் குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் இருக்கும்
உறைய வைக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்துக்கள் குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் இருக்கும்.
இம்மாதிரியான உணவுகள் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். எனவே இம்மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், குடலியக்க பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.
ஆம், வாழைப்பழமும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது வாழைப்பழம் கனிந்துள்ளதைப் பொறுத்தது. கனியாத வாழைப்பழம் குடலியக்கத்தைப் பாதிக்கும். அதுவே நன்கு கனிந்த பழம் என்றால் அது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
சிப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். இதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாவதில் பிரச்சனை ஏற்படும். செரிமான பிரச்சனை ஏற்பட்டால், மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும்.
பால் பொருட்களும் மலச்சிக்கலை உண்டாக்கும். இதற்கு பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் தான். இது வயிற்றில் வாய்வு உற்பத்தியை அதிகமாக்கி, வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். இந்த வாய்வு குடலியக்கத்தில் இடையூறை உண்டாக்கி, கழிவுகள் நகர்வதைத் தடுத்து, மலச்சிக்கலை சந்திக்க வைக்கும்.
வாழைப்பழத்தைப் போன்றே காபியும், சில சமயங்களில் மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் அல்லது அதில் உள்ள காப்ஃபைன் உடலை வறட்சியடையச் செய்து மலச்சிக்கலால் அவஸ்தைப்படச் செய்யும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.