Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி தீக்குளிக்க முயற்சி!



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக் குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்ப்பவர் ஐயப்பன். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பணத்தை மாற்ற முடியாமல் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஐயப்பன் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் தனது குழந்தைகளுக்கு  அரிசி வாங்க முடியாமல் ரேசன் அரிசி கொடுக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டதாக கூச்சலிட்டபடியே ஐய்யப்பன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து  அங்கு  வந்த  வல்துறையினரோடும் ஐயப்பன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.