Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

மனைவியின் மூக்கை கடித்து கொதறிய கணவன்…..!! – காரணம் என்ன என்று தெரியுமா…..?



மனைவியின் மூக்கை கடித்து கொதறிய கணவன்…..!! – காரணம் என்ன என்று தெரியுமா…..?

ஆடம்பர கார் மற்றும் பைக் வாங்கிதராத காரணத்தால் தனது மனைவியின் மூக்கை கடித்து வைத்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிவரன் மற்றும் ராஜ்குமாரி ஆகிய இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள் முதலே, சிவரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அவர், விலையுயர்ந்த கார் மற்றும் பைக் வாங்கிதருமாறு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ராஜ்குமாரி, தனது தாய் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.
இருப்பினும் தனது மனைவியை விடாமல் துரத்திய சிவரன், அவர் வகுப்பிற்கு செல்லும்போதெல்லாம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, ராஜ்குமாரி வகுப்பிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில், அவரை வழிமறித்த சிவரன் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

 

மேலும், தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு ராஜ்குமாரி மறுத்துவிடவே, அவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது மூக்கினை கொடூரமான முறையில் கடித்துகுதறியுள்ளார்.
இதனால் வலியால் துடித்த ராஜ்குமார், தனது பெற்றோரின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டபோதிலும் மூக்கு கொடூரமான முறையில் சேதமடைந்துள்ளதால், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும். ஆனாலும் அவருடைய பழைய மூக்கு போன்ற தோற்றம் கொண்டு வருவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ராஜ்குமாரியின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, சிவரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.