Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கழுத்தறுத்துக் கொலை!



வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காக்கங்கரை கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை மட்டுமல்லாமல், மனைவி ராஜேஸ்வரி மகள் சுகன்யா ஆகிய 3 பேரையும் கழுத்தை அறுத்தும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர்.

மோகனின் மகன் ரஞ்சித் என்பவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.