ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீனிவாச்சாரி என்பவர், உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவரது மனைவியுடன் சென்றுள்ளார்.
அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால், அவரால் நடக்க கூட முடியவில்லை. அதனால், அவரை முதல் தளம் அழைத்துச் செல்ல, அவரின் மனைவி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஸ்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால், அதை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
எனவே, வேறு வழியின்றி தனது கணவரை முதல் மாடிக்கு இழுத்தே சென்றுள்ளார் அந்த பெண். அவருக்கு உதவ யாரும் முன் வரவில்லை. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பலரும், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.