Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது:- ஒரு சாமானிய வியபாரியின் ஆவேசம்!


இந்திய வரி அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்கப் படுகின்றன என்பதற்கு  கீழே உள்ள கேள்வி பதில் சுவையாக இருக்கும்...

அதேவேளையில் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

1)என்ன வேலை செய்கிறாய் ?

வியாபாரம் ..

அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு

2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?

பொருட்களை விற்கிறேன்..

ஓ அப்படியா ,SALES  TAX  ஐ கட்டு.

3)எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?

வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து

அப்படியா ,சரி CENTRAL  TAX   மற்றும்
CUSTOMS  DUTY  TAX  ஐ கட்டு.

4)பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?

வருமானம் (INCOME )...

நன்று INCOME   TAX  ஐ கட்டு

5 )பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?

ஆம் .

எங்கு தயார் செய்து விற்கிறாய் ?

FACTORY  இல் .

அப்படி என்றால் ,EXCISE  DUTY  இனை கட்டு .

6 )உன்னிடம் FACTORY  இருக்கிறதல்லவா ?

ஆம் .

அப்படியென்றால் ,FIRE  TAX  மற்றும் MUNICIPAL  டக்ஸ் ஐ கட்டு.

7) உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?

ஆம் -

சரி STAFF  PROFESSIONAL  TAX  ஐ கட்டு.

8 )மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிகிறாயா ?

ஆம் ...

அப்படி என்றால் TURNOVER  மற்றும் ALTERNATE  TAX  இனை கட்டு .

9 )25000 உனது வங்கியில் இருந்து மொத்தமாக  எடுகிறாயா.

ஆம் .

CASH  HANDLING  TAX  இனை கட்டு .

10 ) உன்னுடைய CUSTOMER ஐ வெளி  இல்(ஹோட்டல்) அழைத்து செல்கிறாயா ?

ஆம்...

FOOD மற்றும் ENTERTAINMENT  TAX  இனை கட்டு .

11)நீ யாருக்காவது சேவை தருவது /மற்றும் சேவை)  இனை வாங்குகிறாயா(service given  or  taken )

ஆம் ...

சரி -SERVICE  TAX  ஐ கட்டு .

12)யாருக்காவது பரிசு கொடுத்தாயா ?

ஆம்...

அப்படி என்றால் ,GIFT  TAX  ஐ கட்டு.


. சரி ... வரி வசூலிக்கும் அரசே உனக்கு நான் சில கேள்விகள் கேட்கிறேன்...

.நீ பிறப்புக்கும்..இறப்புக்கும் மட்டுமே வரி போடவில்லை...

அது போகட்டும்...

நான் 5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வட்டி கட்ட சொல்ற!

சரி கட்டிட்டேன்...

மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன், அதுலையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குற...

நகை வாங்க போறேன் அங்கேயும் வரி வசூல் பண்ற...மக்களை சாகடிச்சி புடுங்குற...

கார் வாங்கும்போதே ரோடு வரி.. வாகன வரின்னு சேர்த்து புடுங்குற..

அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வரின்னு வசூலிக்கிற...

பெட்ரோல் போடும்போது அங்கேயும் மறைமுகமாக வரி புடுங்குற....

இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பேனிக்கு லோன் கொடுப்ப?

மல்லையா மாதிரி ... பல  மொள்ளமாரிகளுக்கு லோன் கொடுப்ப....

பணத்துலேயே பொறந்து வளந்த கோடீஸ்வரங்களுக்கு லோன் கொடுப்ப...

கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பன்னுவே?!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் பணம் செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்ப...

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவடிக்கை எடுத்த?

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா?

கட்டுவானா....????????

பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாத்து....

எல்லா சிஸ்டத்தை மாத்து...

 சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து..

காரி துப்புறமாதிரி எல்லா சிஸ்டமும் இருக்குது....

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.