Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

கல்வி நிறுவனங்கள் இனிமேல் ரொக்கமாக பணத்தை வாங்க கூடாது. மத்திய அரசின் அடுத்த அதிரடி



பெரும்பாலான கல்வி நிலையங்களில் கல்வி கட்டணத்தையும் நன்கொடையையும் ரொக்கமாக பெற்று வரும் நிலையில் இனிமேல் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை ரொக்கமாக வாங்க கூடாது என்றும் செக் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமே கட்டணத்தை பெறா வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும்.  கல்வி நிறுவனங்களின் கட்டணங்களை இன்டர்நெட் மூலமாகவோ, காசோலையாகவோ செலுத்த அந்தந்த நிறுனங்கள் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
வங்கிகள் அல்லது ஆன்லைன் மூலம் மட்டுமே கல்விக்கட்டணம் செலுத்தினால் கல்வி நிறுவனங்களின் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்பதாலே இந்த அறிவிப்பு என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.