November 16, 2016
புதையல் ஆசையில் மனைவி இரண்டு குழந்தைகளை நரபலி கொடுத்த கணவன்..!
இலங்கை கிளிக்குஞ்சு மலை பிரதேசத்தில் பெரும் புதையல் இருப்பதாக பலரால் பேசப்பட்டு வந்தது.
இந்த தகவல் கன்னியா காட்டுப் பகுதியைச் சேர்ந்த ராஜலஷ்மண் என்பவருக்கு தெரியவந்தது.
புதையல் ஆசையில் ராஜலஷ்மண், தான் பார்த்து வந்த கட்டிட மேஸ்திரி வேலையை துறந்தார். முழு நேரமும் புதையல் ஆசையில் வெறியுடன் திரிந்தார்.
இந்த தகவலை அவரது மனைவி நித்யாவிடம் தெரிவித்திருக்கிறார். எதுக்குங்க இந்த வேண்டாத வேலை என மனைவி தடுத்துள்ளார்.
அதை உதாசீனப்படுத்திய ராஜலஷ்மண் கடந்த ஏழுமாதங்களாக பூஜை புனஸ்காரமாகவே நாட்களை கடத்தியுள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இப்படியிருக்க சமீபத்தில் தன் மனைவியிடம் அதிகபட்சமான அன்பை காட்டிய ராஜலஷ்மண், புதையல் ஓகே ஆகிவிட்டது?
கிளிக்குஞ்சு மலை பிரதேசத்தில் நமது இரண்டு பிள்ளைகளையும் நரபலி கொடுத்தால் போதும் உடனடியாக நமக்கு பூதம் புதையலைக்கொடுக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதற்கு மனைவி நித்யா ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் இது பற்றின விஷயத்தை அவளது சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் கவலையோடு தெரிவித்துள்ளார் நித்யா.
இதனிடையே புதையல் வெறிகொண்ட ராஜலஷ்மண் தனது இரண்டு பிள்ளைகளையும் மஞ்சள் நீரில் குளிக்க வைத்து,
மனைவிக்கு தெரியாமல் தன் இடுப்பில் கத்தியை மறைத்து கொண்டு சென்று தனது பிள்ளைகளை வெட்டி கொலை செய்து,
அவர்களின் ரத்தத்தை வீட்டின் நான்கு மூலைகளிலும் தெளித்துள்ளார். பின்னர் மனைவி நித்யாவையும் வெட்டி கொன்றார்.
தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
புதையல் ஆசையில் மனைவி இரண்டு குழந்தைகளை நரபலி கொடுத்த கணவன்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.