Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

சிறிலங்கா பெண்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு கும்பல்! மர்மங்கள் அம்பலம்


 
சிறிலங்காவை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தீவிர விசாரணையை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்துள்ளது.
இதற்காக விசேட விசாரணை பிரிவுவொன்று ஏற்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மாலைத்தீவில் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதனுடன் தொடர்புடைய இருவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு எதிர்பார்க்கின்றது.

நூற்றுக்கும் அதிகமான சிறிலங்கா பெண்கள் மாலைத்தீவில் விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய கடந்த ஒன்றரை மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தன. அவர்களின் மாலைத்தீவுக்கு அனுப்பப்பட்ட பெண்களின் அதிகளவிலானோர் கிராமப் பகுதி பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் வெளிநாட்டவர்களும் தொடர்புபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெண்களை சுற்றுலா விசா மூலம் பங்களாதேஷிற்கு அழைத்து செல்லும் நபர்கள். அந்நாட்டு முக்கியஸ்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதற்காக ஒரு பெண்ணிற்கு சம்பளமாக மாதாந்தம் 150,000 ரூபா கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேக நபரிடம் இருந்து மாலைத்தீவில் விபச்சார சேவைக்காக அனுப்பப்பட்ட பெண்கள் பலரின் புகைப்படங்கள் மற்றும் மேலும் எதிர்வரும் காலங்களில் அனுப்பப்படவுள்ள பெண்கள் சிலரின் புகைப்படங்கள் மற்றும் பயண சீட்டுகள் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான வர்த்தகம் தொடர்பில் தகவல் தெரியும் என்றால் அது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவுக்கு உடன் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.