Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 17, 2016

ரஜினிகாந்த் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடத்தக் கோரி மனு



நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருமான வரித் துறை அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் மனு அளித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  நகைக் கடை உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த போது, அதற்கு நடிகர் ரஜினி வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.