Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

​வெளிநாட்டிற்கு செல்ல மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்



வெளிநாட்டிற்கு செல்ல மறுத்த மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல்காதர். வெளிநாட்டில் பணியிலிருந்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த அப்துல்காதர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மறுத்த அவரின் மனைவி அப்துல்காதரை உள்ளூரிலே பணியாற்றும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களின் வீட்டு கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது சமையல் அறையில் கழுத்து அறுபட்ட நிலையில் மனைவியும், உயிருக்கு போராடிய நிலையில் அப்துல்காதரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்துல் காதரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவரின் மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அப்துல் காதர் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.