Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

ரூபாய் நோட்டு விவகார பின்னணியில் மிகப்பெரிய ஊழல்: ராகுல்காந்தி



பண மாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக, சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழுமையாக ஆலோசனை செய்யாமல் பழைய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு நபரின் நினைப்பில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
பணத்திற்காக வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் சாதாரண மனிதர்கள் என குறிப்பிட்ட ராகுல்காந்தி, தற்போதைய நிலைமையை சரி செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.