Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.



கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடா்ச்சியாக கடந்த மூன்று தினங்கள்  பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது.
அதேவேளை  இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள் கிடைக்காது தற்காலிக வீடுகளில்  வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
குறிப்பாக கிளிநொச்சியில் உருத்திரபுரம், பொன்னகா், இரத்தினபுரம், பரந்தன் சிவபுரம், பண்ணங்கண்டி, மலையபளபுரத்தின்  ஒரு பகுதி, என பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. பல வீதிகளில் வெள்ளம் ஊடறுத்து பாய்கிறது. இதனால் சில மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுவரை வெள்ளத்தினால் இடம்பெயரும் நிலைமை மக்களுக்கு ஏற்படவில்லை. இருந்தும் தற்போது பெய்கின்ற மழை தொடர்ந்தும் பெய்துவருமனால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகாிக்கலாம் என எதிர்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.