November 29, 2016
கனவுப் பசி: உங்கள் ஆம்பிஷனை பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள்
பள்ளியில் படிக்கு சிறு வயதில், ‘நீ வளர்ந்து பெரியவனான பின் என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்டால். டாக்டர், இன்ஜினியர் ஆகவேண்டும். பைலட் ஆகி, விமானம் ஓட்ட வேண்டும். நாசாவில் வேலை செய்ய வேண்டும். ஓவியனாக வேண்டும் கிராபிக் டிசைனராக வேண்டும். பெரிய நடிகனாக வேண்டும் என்றெல்லாம் அந்த பிஞ்சு மனதில் விதவிதமான கனவுகளும் இலட்சியங்களும் பிறக்கின்றன. ஆனால் வளர்ந்து பெரியவனானபின் தனியர் கம்பெனியிலோ அல்லது அரசு அலுவலகத்திலோ கிளார்க்காக வாழ்க்கை வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
ஆனால் மனதின் அடி ஆழத்தில் ‘கனவுப் பசி’ இன்னும் இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே மிகவும் போராடி கனவை நிறைவேற்றுகின்றனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் கனவை தொலைத்து வாழ்கின்றனர், ஒரு சிலர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணித்து அவர்கள் வாழ்கையையும் சீரழிக்கின்றனர். கனவு பசியை தீர்க்காததால் வாழ்க்கையை அர்த்தமற்றதாக நினைக்கின்றனர்.
இன்னொரு பிறவி இருக்கிறதா இல்லையா என்பது முற்றும் துறந்தமுனிவர்களுக்கே புரியாத புதிர் தான். அப்படியிருக்க நம் கனவுகளை நாம் ஏன்? ஒரு சிலருக்கு கனவில் தோல்வி கிடைத்தாலும் கூட அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகவே கருதுகின்றனர். கனவுப்பசி வாழ்க்கைக்கு நல்ல தீனிபோடுவதுடன் வாழ்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிவிடுகிறது.
நன்றி: தினகரன்
கனவுப் பசி: உங்கள் ஆம்பிஷனை பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள்
Reviewed by மறத்தமிழன்
on
November 29, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.