November 15, 2016
அடிக்கடி பணம் எடுக்குறீங்களா? உங்களுக்கு வச்சாச்சு ஆப்பு?
வங்கிக்கு நாள் ஒன்றுக்கு பலமுறை சென்று வெவ்வேறு அடையாள அட்டைகளை காண்பித்து புதிய ரூ.2000 நோட்டுக்களை பெற்று வருபவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் இனிமேல் பணம் மாற்றுபவர்களின் விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய நிதித்துறை செயலர் அறிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் பணிபுரிபவர்களிடமும், கமிஷனுக்கு ஆள் நியமித்தும் தங்களுடைய கருப்புப்பணத்தை புதிய நோட்டுக்களாக மாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை தவிர்ப்பதற்காக இனிமேல் பணம் எடுக்க வருபவர்களின் விரலில் மை வைக்கப்படும் என்றும் இந்த மை ஒரு நாளுக்கு அழியாது என்றும் கூறப்படுகிறது.
இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.4000 மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த பால் போட்டாலும் சிக்சர் அடித்து வருவதால் கருப்பு பண முதலைகள் திணறி வருகின்றனர்.
அடிக்கடி பணம் எடுக்குறீங்களா? உங்களுக்கு வச்சாச்சு ஆப்பு?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.